சர்வதேச மொழித் திறமை மேம்பாடு: புதிய பல்கலை விரைவில் ஸ்தாபிப்பு

நாட்டிலுள்ள மாணவர்களிடையே சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படுமென உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலகத்துக்கு நேற்று கள விஜயம் மேற்கொண்டபோதே அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

தொழில் சந்தையை கருத்திற் கொண்டு இளைஞர்களிடையே சர்வதேச மொழி வல்லுனர்களை உருவாக்குவதே இப்பல்கலைக்கழத்தை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் சிங்கள அகராதி அலுவலகத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றி அதனை அரசாங்க பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்ததாக செயற்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, சிங்கள அகராதி அலுவலகத்தின் பிரதம ஆசிரியர் பேராசிரியர் காமினி தெல பண்டார உள்ளிட்ட பலரும் இங்கு வருகை தந்திருந்தனர்.

 

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை