அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் வெற்றி

அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக உதைபந்து அணியினருக்கும் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழக உதைபந்து அணியினருக்குமிடையில் நடைபெற்ற, சினேகபூர்வ உதைபந்துப் போட்டியில் 09:01 கோல் வித்தியாசத்தில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது. இப்போட்டி, அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகாரத்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்து அணித் தலைவர் எஸ்.சௌகி தலைமையில் போட்டியில் கலந்து கொண்ட முன்னணி வீரர்கள்

ஏ.ஜே.சிப்கார் அஹமட் -04, எஸ்.சௌகி - 02, எஸ்.சம்லி -02, ஏ.எம்.றிப்கி - 01. என்ற அடிப்படையில் லக்கி விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கோல்களைப் புகுத்தினர் .மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிக்கு எம்.முஸர்ரப் நடுவராகக் கடமையாற்றினார். அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத், சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் உப-தலைவர் ஐ.எல்.முனாப், சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் செயலாளரும், அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமான ஏ.ஆர்.எம்.சாதீக், சுப்பர் சொனிக் மற்றும் லக்கி விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள், வீரர்கள், உதைபந்து, இரசிகர்கள் என அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை