டயலொக் கிண்ண றகர் போட்டித் தொடர் நடப்பு சம்பியன் கண்டி அணி வெற்றி

முதற்தர கழகங்களுக்கிடையே நடைபெற்று வரும் டயலொக் கிண்ண றகர் போட்டித் தொடரில் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமான நிலையில் நடப்பு வருட சம்பினான பிரபல கண்டி அணி 55 -- 8 என்ற புள்ளி அடிப்படையில் இலங்கை விமானப்படை அணியை (25) இலகுவாக வெற்றி கொண்டது.

போட்டி ஆரம்பம் முதல் இறுதி வரை கண்டி அணியே முழுப்போட்டியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து.

இடைவேளையின் போது கண்டி அணி 12-3 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது. அவ்வேளை கண்டி அணி 2 ட்ரை, ​1 கொண்வேசன் ஊடாக மேற்படி 12 புள்ளிகளைப் பெற்றிருந்தது. விமானப்படை அணி 1 பெனல்டி மூலம் 3 புள்ளியை மாத்திரம் பெற்றிருந்தது. போட்டி முடிய கண்டி அணி 8 ட்ரை 6 கொன்வேசன் 1 பெனல்டி ஊடாக மொத்தம் 55 புள்ளிளைப் பெற்றது. மேற்படி புள்ளிகளை லவங்க பெரேரா, கவிந்து பெரேரா, ஜேசன் திசாநாயக்க, சபீர் மொகமட். டிலுக்ச டங்கே, ஶ்ரீநாத் சூரிய பண்டார ஆகியோர் தலா 1 ட்ரை வீதமும் சகிரு அந்தோனி 2 ட்ரையுமாக 8 ட்ரைகளைப் பெற்றனர்.

தரிந்து ரத்வத்த அதில் 6 கொன்வேசன்களையும் 1 பெனல்டியையும் பூர்த்தியாக்கி 15 புள்ளிளைப் பெற்றுக் கொடுத்தார்.

விமானப்படை சார்பாக யொகான் பெரேரா 1 ட்ரையும், கயந்த இந்தமல்கொடை 1 பெனல்டியையும் பெற்றனர்.

கண்டி அணியைச் சேர்ந்த சபீர் மொகமட் ஒரு சந்தர்ப்பத்தில் தவறிழைத்தன் காரணமாக போட்டி நடுவர் இசங்க அபேகோனால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இறுதியாக கண்டி அணி 55- 8 என்ற புள்ளி அடிப்படையில் இலங்கை விமானப் படை அணியை இலகுவாக வெற்றி கொண்டது.

அக்குறணை குறூப் நிருபர்

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை