ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய கல்லூரி அடுத்த சுற்றுக்கு தகுதி

ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி 13 வயதின் கீழ் 03 ஆம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நான்கு போட்டிகளில் கலந்து கொண்டு ஒருபோட்டியில் இன்னிங்ஸ் வெற்றியையும் இரண்டு போட்டிகளில் இன்னிங்க்ஸ் வெற்றியையும் ஒருபோட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்து குழு சம்பியான்களாக தெரிவுசெய்யப்பட்டு இரண்டாம் சுற்றுக்கான தகுதியினை பெற்றுள்ளது.

முதல் போட்டி சூரியவெவ நமடகஸ்வெவ மகாவித்தியாலத்துடன் இடம் பெற்றதோடு முதலில் துடுப்பாடிய ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதில் எம். எஸ் மொஹமட் 52 ஓட்டங்களையும்,பாஸித் மௌலானா 26 ஓட்டங்களையும் பெற்றதோடுபந்து வீச்சில் டி. எம். கவிது 38 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய சூரியவெவ நமடகஸ்வெவ மகாவித்தியாலய அணியினர் 20 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். பந்துவீச்சில் எம். எஸ் மொஹமட் 05 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களையும் எம். நஸ்வான் 11ஓட்டங்களுக்கு 02விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய சூரியவெவ நமடகஸ்வெவ மகாவித்தியாலய அணியினர் 09 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இப் போட்டியில் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் முதல் இன்னிங்ஸில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டி தங்காலை ஆண்கள் தேசிய பாடசாலையுடன் இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களை 03 விக்கெட் இழப்பிற்கு பெற்றனர். இதில் எம். எஸ் மொஹமட் 144 ஓட்டங்களையும், பாஸித் மௌலானா 31ஓட்டங்களையும் பெற்றனர்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தங்காலை ஆண்கள் தேசிய பாடசாலை அணியினர் முதல் இன்னிங்ஸில் 12 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தனர். பந்துவீச்சில் எம். எஸ் மொஹமட் 06 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும் எம். ஆகிப் இர்பான் ஓட்டங்கள் எதுவுமின்றி 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தங்காலை ஆண்கள் தேசிய பாடசாலை அணியினர் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். இதில் கே. முனசிங்க 20 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் எம். நஸ்வான் 25 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையுமஎன். எம். ரஸாக் 18 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். இப் போட்டியில் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 116 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

மூன்றாவது போட்டி ஹம்பாந்தோட்டை புனித மேரி தேசிய பாடசாலையுடன் இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் முதல் இன்னிங்ஸில் 155 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது. இதில் எம். நஸ்வான் 74 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் எஸ் இதுவர 14ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் டீ. சஜான் 57 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஹம்பாந்தோட்டை புனித மேரி தேசிய பாடசாலை அணியினர் முதல் இன்னிங்ஸில் 101 ஓட்டங்களுக்கு 08 விக்கெட்டுக்களை இழந்தனர். ஆர்.பிராஸ் 19 ஓட்டங்களைபெற்றார். பந்துவீச்சில் எம். எஸ் மொஹமட் 26 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் எம். நஸ்வான் 29 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். போட்டிவெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

நான்காவது போட்டி ஹம்பாந்தோட்டை சுசி தேசிய பாடசாலையுடன் இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சுசி தேசிய பாடசாலை அணியினர் 69 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தனர். பந்துவீச்சில் எம். எஸ் மொஹமட் 19ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களையும் எம். ஆகிப் இர்பான் 08 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் 260ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதில் எம். நஸ்வான் 107 ஓட்டங்களையும், என். எம். ரஸாக் 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் எம். மதுரங்க 63 ஓட்டங்களுக்கு 07விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Sat, 01/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை