பயங்கரவாதிகளுக்கு புகலிடமளிக்கும் சட்டம் நாட்டுக்கு அவசியமில்லை

பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஏனையோரில் எவராவது அநீதியான முறையில் கைது செய்யப்பட்டிருப்பாராயின் மனித உரிமை மீறல் அல்லது ஏனைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என முதலீட்டு இராஜாங்க அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் பழிவாங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை நீதி மன்றத்துக்கு அழைத்து சென்றதைப் போன்று தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் செயற்படாது என்றும் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்:

பயங்கரவாதிகளுக்கு புகலிடமளிக்கும் சட்டம் நாட்டுக்கு தேவையான ஒன்று அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை தேற்கடிக்க முடியாது என்று சர்வதேசம் தெரிவித்திருந்த நிலையில் 30 வருட பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு சட்டம் உதவியது. இதில் எந்தவித தவறையும் நாம் காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை