வறுமையை சவாலாக கொண்டு கற்றால் வரவேற்பு கிடைக்கும்

டொக்டர் ஏ. லதாகரன்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையினால் மொரவெவ பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மொரவெவ ஆரம்ப சுகாதார வைத்திய பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி டொக்டர் போல் ரொஷான் தலைமையில் இந்நிகழ்வு நேற்றுமுன்தினம் (05) இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களை தெரிவு செய்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ​ெடாக்டர் ஏ. லதாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

டொக்டர் ஏ. லதாகரன் உரையாற்றுகையில், வறுமை கற்றல் நடவடிக்கைக்கு எவ்வித தடையும் இல்லை. இம்முறை விஞ்ஞான பிரிவில் அதிகளவிலான புள்ளிகளை பெற்ற திருகோணமலை மாணவி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்ததாக தெரியவருகின்றது.

ஆனாலும் அந்த மாணவி வறுமையை சவாலாக எடுத்துக்கொண்டு கற்றல் நடவடிக்கைகளில் வேகமாக செயற்பட்டுவந்தமையினால் இப்போது அம்மாணவிக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கின்றது.

இருந்தபோதிலும் நாங்கள் உங்களுக்கு ஊக்குவிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாட்டை செய்து வருகின்றோம் என்றார்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை