மெனிங் சந்தை கட்டடத் தொகுதி நிர்மாணப் பணிகள் துரிதம்

பேலியகொடை மெனிங் சந்தை கட்டடத் தொகுதி நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ,நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 1142 கடைகளுடன் கூடிய இந்த வர்த்தகக் கட்டடத் தொகுதியை இவ்வருட நடுப்பகுதியில் திறந்து வைக்க எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரதமரின் ஆலோசனைக்கமைய நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

கொழும்பு நகரில் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொழும்பு மீன் மொத்த மீன் சந்தையை பேலியகொடையில் அமைக்க பாதுகாப்பு, நகர அபிவிருத்தி செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனுடன் இணைந்ததாக கொழும்பு மெனிங் மரக்கறி சந்தையையும் போலியகொடைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. ஆரம்ப திட்டத்திற்கு அமைய 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்த வர்த்தக சந்தையில் 1142 கடைகளும் பாரிய வாகன தரிப்பிடமும் ஊழியர்களின் ஓய்வறையும் மருத்துவ நிலையமும் வங்கி, சிற்றுண்டிச்சாலை, குளிரூட்டிஅறை என்பனவும் அடங்குகின்றன. பிரதமரின் ஆலோசனைக்கமைய அமைச்சின் செயலாளர் பிரியத் பந்து விக்ரம,நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர் ஹர்சான் த சில்வா ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை