தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருடன் காதர் மஸ்தான் எம்.பி சந்திப்பு

யுத்தத்தால் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டங்களை நிர்மாணித்து வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் நிமல் லங்ஸா மற்றும் அவரது செயலாளர், உயரதிகாரிகளுடனான இவ் உயர்மட்ட சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

சந்திப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் கொங்ரீட் சட்டக பொருத்து வீடுகளை நிர்மாணித்தல், இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை நிர்மாணிக்க குடும்பமொன்றுக்கு தலா 100,000.00 ரூபா கொடுப்பனவு வழங்குதல், நீண்டகாலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடற்றிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வினைக் காணுதல் என்பன தொடர்பில் காதர் மஸ்தான் இராஜாங்க அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை கொங்ரீட் சட்டக வீடுகள் தொடர்பாக வன்னி மாவட்டத்தின் மூன்று அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டப் பணிப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோருடன் வவுனியா மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பதுளைக்கு விஜயம் செய்த மேற்படி குழுவினர் அங்கு அமைக்கப்படும் கொங்ரீட் வீடுகளை பார்வையிட்டதுடன் அவற்றில் சிறு மாற்றங்களை செய்து வன்னி மாவட்டத்திலும் அவற்றை அமைப்பதற்கு பரிந்துரைத்த விடயமும் சந்திப்பில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

நமது நிருபர்

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை