ஜனாதிபதியின் நிதியை ஆளுநர் வடக்குக்கு கொண்டுவர வேண்டும்

கிராமப்புற மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படுகின்ற நிதி மிக குறைவாக இருப்பதால் உள்ளூராட்சி மன்றங்கள் சரியான முறையில் இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

எனவே நன்கு ஆளுமைகொண்ட வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் விஷேட நிதியை வடக்குக்கு கொண்டுவந்து அபிவிருத்திக்கு உதவிகரம் நீட்ட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் உப அலுவலகம் வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றங்கள்தான் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை நேரடியாக தீர்க்கக்கூடியவை. ஆனால் இந்த உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கு சேவையாற்றுவது மிக சொற்பமே. இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது வட மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மிக சொற்பமே.

வட மாகாண பிரதம செயலாளரினால் முன்வைக்கப்படுகின்ற திட்டத்தில் பத்தில் ஒரு பங்கே வட மாகாணத்துக்கு ஒதுக்கப்படுகின்றது.

வட மாகாணத்தைப் பொறுத்தமட்டில் பலதரப்பட்ட தேவைகள் அதிகம் இருக்கின்றது.

மத்திய அரசால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மிக குறைவாக இருப்பதால் உள்ளூராட்சி மன்றங்கள் சரியான முறையில் இயங்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

ஆகவே நான் ஆளுநரிடம் வேண்டி நிற்பது பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற விஷேட நிதியில் கணிசமான நிதியை வடக்கு மாகாணத்துக்கும் கொண்டு வருவதற்கான முயற்சியை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தலைமன்னார் நிருபர்

 

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை