ஈராக்கில் இருந்து வெளியேற அமெரிக்க இராணுவம் மறுப்பு

ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறுவது குறித்து அமெரிக்க ஜெனரல் ஒருவரின் கடிதம் வெளியான நிலையில், ஈராக்கில் இருந்து அமெரிக்கா தமது துருப்புகளை வெளியேற்றாது என்று அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.

ஈராக் பாராளுமன்றம் படைகளை வெளியேறும்படி உத்தரவிட்ட நிலையில் அடுத்துவரும் நாட்கள் மற்றும் வராங்களில் அமெரிக்க படைகளை மாற்று இடத்தில் நிலைகொள்ளச் செய்யப்படும் என்று அந்தக் கடிதம் குறிப்பிட்டிருந்தது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் பணிக்குழு தலைவர் பிரகேடியர் ஜெனரல் வில்லியம் எச் சீலி, ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைக்கு பொறுப்பான பிரதித் தலைவர் அப்துல் அமீருக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டிருந்தது. எனினும் படைகளை வெளியேற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று எஸ்பர் அந்தச் செய்தியை பின்னர் மறுத்துக் கூறினார்.

இந்தக் கடிதம் தவறுதலாக எழுதப்பட்டிருப்பதாக அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைவர் மார்க் மில்லி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜெர்மனி ஈராக்கில் இருக்கும் தமது சில துருப்புகளை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை