ஐ.நா கூட்டத்தில் பங்கேற்ற சாரிப்புக்கு விசா நிராகரிப்பு

நியூ யோர்க்கில் நாளை நடைபெறவுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பங்கேற்கச் செல்ல ஈரான் வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் சாரிப்பிற்கு அமெரிக்கா விசா மறுத்துள்ளது.

இதனை உறுதி செய்த சாரிப், “அமெரிக்காவுக்கு ஒருவர் வந்து உண்மையை அம்பலப்படுத்துவது பற்றி அவர்கள் பயப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

1947 ஐ.நா தலைமையக உடன்படிக்கையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அமெரிக்கா அனுமதி அளிக்க வேண்டும். எனினும் “பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை” ஆகிய காரணிகள் அடிப்படையில் அமெரிக்காவால் விசா மறுக்க முடியும்.

இந்த விசா மறுப்புக் குறித்து ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் கருத்து வெளியிட மறுத்துள்ளார். சாரிப் மீது அமெரிக்கா தடை விதி த்த நிலையில் கடந்த செப்டெம்பரில் நியூயோர்க்கில் இடம்பெற்ற உலகத் தலைவர்களின் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கடைசியாக பங்கேற்றார்.

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை