ரியல் மெட்ரிட் முன்னேற்றம்

ரியல் வலடொலிட் அணிக்கு எதிராக பிந்திய நேர கோல் மூலம் 1–0 என வெற்றியீட்டிய ரியல் மெட்ரிட் அணி லா லிகாவில் பார்சிலோனாவை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

வலன்சியா அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பார்சிலோன 2–0 என தோல்வியடைந்தது சினேடின் சிடேனின் ரியல் மெட்ரிட் முன்னேற்றம் காண வாய்ப்பாக அமைந்தது.

எனினும், இந்தப் போட்டி ரியல் மெட்ரிட்டுக்கு இலகுவாக இருக்கவில்லை. தனது சொந்த மைதானத்தில் ஆடிய ரியல் வலடொலிட் கடும் நெருக்கடி கொடுத்தது.

இந்நிலையில் 78 ஆவது நிமிடத்தில் டோனி க்ரூஸ் பரிமாற்றிய பந்தை பின்கள வீரர் நிகோ தாவித் தலையால் முட்டி ரியல் மெட்ரிட்டின் வெற்றி கோலை பெற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் லா லிகாவில் பெறும் முதல் கோல் இதுவாகும்.

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை