தென் சூடான் கிராமத்தில் தாக்குதல்: 32 பேர் பலி

சூடான் மற்றும் தென் சூடானின் பிரச்சினைக்குரிய அபியி பிராந்தியத்தில் நாடோடி மிஸ்ரியா மேய்ச்சல்காரர்கள் கிராமம் ஒன்றில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

“இந்தத் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். சிறுவர்கள் உட்பட 15 பேர் கடத்திச் செல்லப்பட்டிருப்பதோடு 20 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன” என்று அபியி பிராந்திய தலைமை நிர்வாகி கோல் அலோர் கோல் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த பிராந்தியத்தில் நிகோர் டின்கா சமூகத்தினர் வாழ்வதோடு அரபு மிஸ்ரியா நாடோடிகள் தமது கால்நடைகளின் மேய்ச்சலுக்காக சூடானில் இருந்து தென் சூடானுக்குள் ஊடுருவுகின்றனர்.

இந்நிலையிலேயே கடந்த புதன்கிழமை காலை டின்கா கிராமத்திற்குள் நுழைந்த தாக்குதல்தாரிகள் வீடுகளுக்கு தீயிட்டுள்ளனர். “உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயிடப்பட்டுள்ளன” என்று கோல் தெரிவித்தார். நிலைமை இப்போது சுமுகம் அடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை