ஈராக் – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை காக்க இணக்கம்

அமெரிக்கா மற்றும் ஈராக் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து கட்டிக்காக்க இருநாட்டு ஜனாதிபதிகளும் இணக்கம் கண்டுள்ளனர்.

சர்வதேச பொருளாதார கருத்தரங்கையொட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் ஈராக் ஜனாதிபதி பர்ஹம் சாலிஹ்வும் சந்தித்துப் பேசினர்.

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை சாலிஹ் சுட்டிக்காட்டினார். வளைகுடா வட்டாரத்தில் பயங்கரவாதத்தை முறியடிக்க இரு நாடுகளும் போராடி வருவதை அவர் குறிப்பிட்டார்.

அதே கருத்தை முன்வைத்த டிரம்ப், அமெரிக்காவும் ஈராக்கும் இராணுவ விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதாகக் கூறினார்.

அரசுரிமையுள்ள நிலையான, வளமான ஈராக்கைக் கட்டியெழுப்புவதற்கான கடப்பாட்டை டிரம்ப் மறுவுறுதிப்படுத்தினார். அமெரிக்கப் படையினர் ஈராக்கில் தொடர்ந்து செயல்படுவது முக்கியம் என்று இரு தலைவர்களும் கூறினர்.

ஈராக் தலைநகரில் ஈரான் இராணுவத் தளபதி கசெம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்ததைத் தொடந்து அமெரிக்கத் துருப்புகளை ஈராக்கில் இருந்து வெறியேறும்படி ஈராக் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை