1000 ரூபா சம்பளம் மார்ச் மாதம் கட்டாயம் வழங்கியே தீருவோம்

பெருமளவு வருமானத்தை ஈட்டும் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாதென கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை அரசாங்கம் கொண்டுவந்திருத்திருந்தது.

இவ் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000ரூபாவாக அதிகரிப்பதாக வாக்குறுதியளித்திருந்தார். கடந்த அரசாங்கத்தால் 1,000ரூபா சம்பளத்தை அதிகரிப்பதாக கூறிக்கொண்டு இறுதியில் 50ரூபாவை வழங்குவதாக கூறினார்கள்.

ஆனால், அந்த 50ரூபாவும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் தற்போதைய ஜனாதிபதி கடந்த பொங்கல் தினத்தன்று 1,000ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கையெடுப்பது தொடர்பாக அறிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியினரோ இந்த சம்பளத்தை வழங்கினால் தோட்டங்களை மூட வேண்டி வருமென கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் தோட்டங்கள் இலாபமடைந்துகொண்டு சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனக் கூறுகின்றன. இந்த நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் பாரியளவில் இலாபம் அடைகின்றன. இதனால் அந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியும்.

இதற்காக தோட்டத் தொழிலாளர்களும் பங்களிக்க வேண்டும். கடந்த காலங்களில் 1,000ரூபா பற்றி கூறியவர்கள் இங்கு காணவில்லை.

அவர்களுக்கு இதில் விருப்பமில்லை. என்றாலும் மார்ச் மாதம் முதல் கட்டாயம் 1,000 ரூபா சம்பளத்தை நாம் பெற்றுக்கொடுப்போம் என்றார்.

Sat, 01/25/2020 - 09:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை