முதலாம் தவணைக்குள் அதிபர் வெற்றிடங்கள் 50 சதவீதம் பூர்த்தி

பாடசாலைகளின் முதலாம் தவணைக்குள் அதிபர் வெற்றிடங்களில் 50சதவீதம் பூர்த்தி செய்யப்படுமென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அதனை தொடர்ந்துவரும் ஏனைய இரண்டு தவணைகளுக்குள்ளும் மிகுதி 50வீதம் அதிபர் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் 278தேசிய பாடசாலைகளில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதிபர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஒன்பது வருடங்களாக நிலவிய வெற்றிடத்தை எதிர்வரும் 05மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும். இதேவேளை இந் நாட்டின் தேசிய பாடசாலைகளின் வலையமைப்பை பலப்படுத்த வேண்டும். இலங்கை கல்வி நிர்வாகச் சேவையின் தரம் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது இலங்கை அதிபர் சேவையின் தரம் ஒன்றில் சித்தியடைந்தவர்களுக்கே தேசிய பாடசாலைகளில் அதிபர் நியமனம் வழங்கப்படுவதுண்டு.

இலங்கை அதிபர் சேவையில் தரம் ஒன்றில் சித்தியடைந்தவர்களுக்கு அதிபர் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சையை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடத்தியிருந்தது. இதற்கான தெரிவு அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச்சேவை குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

Sat, 01/25/2020 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை