ஐ.பி.எல்லில் அதிக தொகைக்கு ஏலம்போக வாய்ப்புள்ள வீரர்கள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் டிசம்பர் 19ஆம் திகதி ஐ.பி.எல் ஏலத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் கமின்ஸ் மற்றும் இங்கிலாந்து சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்று கணிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐ.சி.சி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் கமின்ஸ் 1 மற்றும் 5ஆம் இடங்களில் முறையே உள்ளார். டெல்லி அணியில் 2017இல் இருந்தார். இந்தத் தொடரில் அவர் 12 போட்டிகளில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகித்தார்.

கமின்ஸ் தன் அடிப்படை விலையை இந்திய ரூபா 2 கோடியாக நிர்ணயிக்க இங்கிலாந்து சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸின் அடிப்படை விலை இந்திய ரூபா 1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிக்கி பொண்டிங் கூறியதாவது, “இந்த முறை உலக வேகப்பந்து வீச்சாளர்கள் மீதான கவனக்குவிப்பு இருக்கும், எனவே பெட் கமின்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதே போல் கிளென் மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ், மிட்செல் மார்ஷ், ஜிம்மி நீஷம், கொலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோரும் பெரிய அளவில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதே போல் ரஹானே, அஸ்வின் இம்முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வளம் சேர்ப்பார்கள். அவர்களுடன் பெரிய அனுபவத்தை அணிக்குக் கொண்டு வருகின்றனர்” என்றார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் ரூ.27.85 கோடி உள்ளது, இதில் அவர்கள் 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை