உலகக் கிண்ணத்தை ஏற்றுநடத்த நியூசிலாந்து, ஆஸி. விண்ணப்பம்

2023 பெண்கள் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்த அவுஸ்திரேலியாவும் நியூசிலந்தும் இணைந்து விண்ணப்பம் செய்துள்ளன. போட்டியை ஏற்றுநடத்த அனுமதி கிடைத்தால் அங்கு நடைபெறும் முதல் பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியாக அது அமையும். 2023ஆம் ஆண்டில் 32 அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கின்றன.

ஜப்பான், பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் போட்டிகளை ஏற்றுநடத்த விண்ணப்பிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் 24 அணிகள் கலந்துகொண்டன.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை