பிலிப்பைன்ஸ் பூகம்பத்தில் சிறுமி உட்பட எழுவர் பலி

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் ஆறு வயது சிறுமி உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இருந்து மூன்று மைல் தொலைவில் கடந்த ஞாயிறு இரவு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளதால் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதற்கிடையே இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், படாடா பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிப்பாடிகளில் சிக்கி உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பூகம்பத்திற்கு இதுவரை 37 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள ஐந்தாவது சக்திவாய்ந்த பூகம்பம் இதுவாகும்.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் ‘ரிங் ஒப் பயர்’ இன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் பூகம்பங்களும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை