கழக உலகக் கிண்ணத்தை வென்றது லிவர்பூல் அணி

ரொபார்டோ பர்மினோ மேலதிக நேரத்தில் பெற்ற கோல் மூலம் பிரேசிலின் பிளமின்கோ அணியை 1–0 என வீழ்த்தி லிவர்பூல் அணி கழக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

கட்டாரின் கலீபா சர்வதேச அரங்கில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் லிவர்பூல் கிண்ணத்தை வென்றமையானது அவ்வணி கழக உலகக் கிண்ணத்தை முதல் முறை கைப்பற்றிய சந்தர்ப்பமாகப் பதிவானது.

2008 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு பின்னர் இங்கிலாந்து கழகம் ஒன்று இதனை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

ஒவ்வொரு கண்டத்திலும் சம்பியனாகும் கழகங்களுக்கு இடையிலே ஒவ்வொரு ஆண்டும் கழக உலகக் கிண்ணம் நடைபெற்று வருகிறது.

போட்டியின் முழு நேரத்தில் இரு அணிகளும் கோல்பெறத் தவறிய நிலையில் மேலதிக நேரத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் சாடியோ மானே பரிமாற்றிய பந்தை பெனால்டி பெட்டியின் நடுவில் இருந்து கோலாக மாற்றினார் பர்மினோ.

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கை வென்ற லிவர்பூல் இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கிலும் முதலிடத்தில் உள்ள நிலையில் கழக உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதுவரை நடந்த 13 கழக உலகக் கிண்ணப் போட்டியில் 12 கிண்ணங்களை ஐரோப்பிய அணிகளே வென்றிருப்பதோடு கடைசியாக நடந்த ஏழு தொடர்களையும் ஐரோப்பிய கழகங்களே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை