2019இல் மெஸ்ஸி 50 கோல்

லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டில் தனது 50ஆவது கோலை புகுத்த அலவஸ் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4–1 என்ற கோல் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது.

லுவிஸ் சுவாரஸ் மூன்று கோல்களைப் பெற உதவியதோடு அவர் சொந்தமாக ஒரு கோலை புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. தனது சொந்த மைதானமான நூ காம்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியுடன் லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா ரியல் மிட்ரிட்டை விடவும் மூன்று புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தை உறுதி செய்தது. முதல் பாதியில் பார்சிலோனா சார்பில் அன்டொயினே கிரிஸ்மான் ஆரம்ப கோலையும் ஆர்டுரோ விடால் இரண்டாவது கோலையும் புகுத்தினர். எனினும் இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே அல்வேஸ் சார்பில் பேரே பொன்ஸ் கோல் ஒன்றை திருப்பினார்.

எனினும் 25 யார்ட் தூரத்தில் இருந்து மெஸ்ஸி மின்னல் வேகத்தில் மூன்றாவது கோலை பெற்ற நிலையில் கையில் பந்து பட்டதை அடுத்து கிடைத்த பெனால்டியை சுவாரஸ் கோலாக மாற்றினார்.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை