முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை இளையோர் சம்பியன்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணி இங்கிலாந்து இளையோர் அணியை 77 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுடன் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணியும் பங்கேற்ற இந்த முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஆறு குழுநிலை போட்டிகளில் 4இல் வென்ற இங்கிலாந்து மற்றும் 3இல் வெற்றியீட்டிய இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் ஆடின.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்்டுகளை இழந்து 265 ஓட்டங்களை பெற்றது. நவோத் பரணவிதான 108 ஓட்டங்களை பெற்றதோடு காமில் மிஷார 69 ஓட்டங்களை குவித்தார். இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 188 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஜோர்டன் கோக்ஸ் அதிகபட்சம் 77 ஓட்டங்களை பெற்றார். இலங்கை சார்பில் கவிந்து நதீஷன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அஷைன் டானியல், சுதீர திலகரத்ன மற்றும் நவோத் பரணவிதான தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை