காசா ரொக்கெட்டால் நெதன்யாகு மேடையில் இருந்து வெளியேற்றம்

காசாவில் இருந்து ரொக்கெட் குண்டு வீசப்பட்டதை அடுத்து தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அவசரமாக மேடையில் இருந்து பாதுகாப்பு தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

எனினும் அந்த ரொக்கெட் குண்டு நடுவானில் வைத்தே வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.  

இந்த ரொக்கெட் வீச்சுக்கு பதில் நடவடிக்கையாக காசாவில் ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அது குறிப்பிட்டது. அஷ்கலொன் நகரில் கடந்த புதன் அன்று தேர்தல் மேடையில் நெதன்யாகு உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.  

பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நெதன்யாகு சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் மேடையேறி தனது உரையைத் தொடர்ந்தார்.  

இஸ்ரேலில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/27/2019 - 11:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை