ஆப்கான் அமைதி இயக்கத்தினர் 27பேரை தலிபான்கள் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தக் கோரி போராடி வரும் அமைதி இயக்கத்தைச் சேர்ந்த 27பேரை தலிபான்கள் கடத்திச் சென்றுள்ளனர்.  

யுத்த நிறுத்தம் ஒன்றைக் கோரி ஹரத் மாகாணத்தில் இருந்து பேரணியை ஆரம்பித்த மக்கள் அமைதி இயக்கத்தினர் பராஹா மாகாணத்தை அடையும்போது காணாமல்போயிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

இது பற்றி தலிபான்கள் இதுவரை கருத்து வெளியிடவில்லை.  

அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டிருந்தபோதும் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் சர்வதேச படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  

ஆறு கார் வண்டிகளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பிரதான வீதி ஒன்றில் வைத்து நிறுத்தப்பட்டு அடையாளம் தெரியாத இடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று பராஹ் மாகாண பிரதி ஆளுநர் மசூத் பக்தாவர் குறிப்பிட்டுள்ளார்.  

ஆப்கானிஸ்தான் அமைதி இயக்கத்திற்கு அந்நாட்டு அரசு நிதியுதவி அளித்து வருவதாக தலிபான்கள் குற்றம்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.    

Fri, 12/27/2019 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை