மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

மட்டக்களப்பில் வறுமை நிலைக்குட்பட்ட 400 மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (21) மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீகாந்த தலைமையில் நடைபெற்றது.

கியுமெடிக்கா லங்கா நிறுவனமானது 2013 அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட செயலகத்துடன் இணைந்து உலர் உணவுப்பொதிகள் வழங்கிய நிறுவனம் என்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் முகமாக தற்போது யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 2000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கியிருக்கின்றது என கியுமெடிக்கா லங்கா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் என்.நல்லசிங்கம் தெரிவித்தார்.

மேலதிக அரசாங்க அதிபர் கல்வி தொடர்பாக கருத்து தெரிவிக்ைகயில்; தொழிநுட்ப கல்வியறிவு மற்றும் ஆங்கில கல்வியறிவு இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமாகக் காணப்படுகிறது என்றும், வறுமை நிலையில் பின் தங்கியுள்ள மாணவர்களை அ​ைனகமானோர் கல்வியை இடைநடுவில் விட்டுவிலகுகின்றார்கள், இந்நிலை மாறி அனைத்து மாணவர்களும் கல்வியில் சிறந்த தொரு பிரஜையாக வரவேண்டும் என வாழ்த்து கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரேகா, கியுமெடிக்கா லங்கா நிறுவனமானத்தின் கணக்காளர் ரொனி தேவானந்தன், வெளிகள ஒருங்கிணைப்பாளர் ஜெயரஞ்சன் மற்றும் கியுமெடிக்கா லங்கா நிறுவனத்தின் உழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Mon, 12/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை