இந்துக்கள் மத்தியில் சிவ வழிபாட்டை ஊக்குவிக்க சிவலிங்கம் அன்பளிப்பு

இந்துக்கள் மத்தியில் சிவ வழிபாட்டை ஊக்குவப்பதற்காக சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம் பலவிதமான ஆன்மீக செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அண்மையில் மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த ( சா.த ) வகுப்பில் இவ்வருடம் பரீட்சை எழுதும் 15 மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் வேண்டுகோளை ஏற்று தலா ஒரு சிவலிங்கம் வீதம் வழங்கப்பட்டது.

பிள்ளைகளின் விருப்பத்தை பெற்றோர் தமது வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவதற்கான தமது சம்மதத்தை எழுத்து மூலம் அதிபரூடாக நிறுவனத்திற்கு வழங்கிய பின்பே சிவலிங்கம் அப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.

மாணவர்களும் பெற்றோரும் நாள்தோறும் காலையும் மாலையும் எவ்வாறு சிவலிங்கத்தை வீட்டில் வைத்து குறிப்பிட்ட நேரம் வழிபட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை நிறுவனத்தின் குரு வழங்கினார்.

சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தினால் மக்களின் தங்குதடையற்ற சிவ வழிபாட்டிற்காக அட்டப்பள்ளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மோட்சலிங்கேஸ்வரருக்கும் குறிப்பிட்ட 15 சிவலிங்கங்களும் ஒன்றுசேர நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் தூய்மைப்படுத்தப்பட்டு சக்தியூட்டப்பட்டபின் அவை பாடசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.

சைவர்கள் அனைவரும் தவறாது தத்தமது வீட்டில் நாள்தோறும் காலையும் மாலையும் குறிப்பிட்ட நேரத்தில் சிவனை வழிபடவேண்டும் என்பதை அனைத்து சைவர்கள் மத்தியிலும் அறிமுகம் செய்வதே இவ்வாறான சிவலிங்கம் அன்பளிப்பாக வழங்கும் கன்னி முயற்சி செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டதன் நோக்கமாகும்.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை