மலையக பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பவாணிஸ்ரீ நிரூபித்துள்ளார்

13 ஆவது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெண்கல பதக்கத்தை பெற்ற புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ க்கு பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேசரீதியில் வெற்றிவாகை சூட்டி இலங்கைக்கும், மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தை திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் போது மலையக பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ 13 ஆவது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெண்கல பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இது இலங்கைக்கும், மலையகத்திற்கும், மலையக பெண்களும் பெருமையை தேடிக் கொடுத்து உள்ளது.

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்டம் என்பது மலையகத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும்.

மலையகம் என்றாலே பின் தங்கிய பிரதேசம் அதிலும் பின்தங்கிய பிரதேசம் என்றால் எப்படி இருக்கும். இவ்வாறான பிரசேத்தில் இருந்து இந்த சாதனையை நிலை நாட்டியமை பெருமையிலும் பெருமை, சாதனையிலும் சாதனை என்று தான் சொல்ல முடியும்.

 

மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர்

Sat, 12/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை