அர்ஜுன் மகேந்திரன் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சில வாரங்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நிலைமை காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

அநுராதபுரம் உயர் தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்ைகயில், அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் உடனடியாக  அவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார். பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மகேந்திரன் நாட்டிற்கு வரவழைக்கப்படும் வரை முறிகள் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு சிக்கல் காணப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அர்ஜுன் மகேந்திரன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதும் அவர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படுவார். பின்னர் முறிகள் மோசடியுடன் தொடர்புடைய மேலும் பலர் குறித்து தெரியவரும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர் 

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை