மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

சைத்துன் நஹ்ர் பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று அலிம் நகர், வாங்காமம் போன்ற பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற வசதி குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் இடம்பெற்றது.

அமைப்பின் செயலாளரும் கிழக்கு மாகண இணைப்பாளருமான ஏ.எம்.எம்.அனீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், லுலு நிறுவன பணிப்பாளர் என்.எம்.சர்ராஜ், ஏ.ஜே.புட்ஸ் நிறுவன பணிப்பாளர் கே.எல்.அஹமட் அஜ்மல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இவ் அமைப்பானது கொழும்பு, அநுராதபுரம், கெக்கிறாவை, சாய்ந்தமருது, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த குடும்பங்கள் மற்றும் அவர்களது கல்வி கற்கின்ற பிள்ளைகளுக்கான பல்வேறு உதவிகளை அண்மையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்

Tue, 12/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை