மனிதனுடன் வாழ்ந்த பண்டைய மனிதன்

தற்கால மனிதனுடன் தொடர்புடைய பண்டைய மனித இனம் ஒப்பீட்டளவில் அண்மைக் காலம் வரை தென்கிழக்கு ஆசியாவில் உயிர்வாழ்ந்திருப்பது புதிய ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹோமோ எரெக்டஸ் என்ற பண்டைய இனம் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்பட்டதோடு, முதலில் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த இனமாகவும் உள்ளனர்.

புதிய காலக்கணிப்பு ஆதாரங்களுக்கு அமைய இந்தப் பண்டைய இனம் உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் அழிந்த பின்னரும் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 100,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை உயிர் வாழ்ந்துள்ளனர். இதன்மூலம் தற்கால மனிதன் இருந்த காலத்திலேயே இந்த பண்டைய மனிதனும் பூமியில் வாழ்ந்துள்ளான்.

இந்த ஆய்வு குறித்த விபரம் ஜேர்னல் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை