உலகின் உயரமான மரம் கண்டுபிடிப்பு

உலகின் மிக உயரமான மரம் அமேஸான் காடுகளில் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போது, அமேஸான் காடுகளின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள ஜாரி ஆற்றங்கரையில் உள்ள டினிஸியா எக்ஸல்சா என்ற மரம் உலகின் மிக உயரமாக வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 400 ஆண்டுகளைக் கடந்த இந்த மரம் தற்போது 290 அடிகளைக் கடந்து வளர்ந்துள்ளது.

இந்த மரம் சுமார் 40 தொன் வரை எடை கொண்டதாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாரி ஆற்றங்கரையில் இதேபோன்று பல மரங்கள் 100 அடிக்கு மேல் வளர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை