சீன, அமெரிக்க வர்த்தகப் போட்டியால் சீன ஏற்றுமதிகளில் பெரும் வீழ்ச்சி

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதத்துக்கான சீனாவின் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 1.1% வீதத்திலான ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்சினையே இதற்கான காரணமாகும்.இந்நிலையில் சீனாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள டிசம்பர் 15 வரையான காலக்கேடு அமுலில் இருப்பதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ,

அண்மையில் தெரிவித்திருந்தார்.மேலும் சீனாவின் ஏற்றுமதிப் பொருட்கள் சிலவற்றில் புதிய வரிகளை விதிக்கவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.இவற்றின் பெறுமதி சுமார் 156 பில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக பிரச்சினையை முடித்து ஒரு சுமூகமான உடன்படிக்கையை எட்ட அமெரிக்காவும், சீனாவும் முயன்று வருகின்றன. ஆனால், இதுவரை அம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன.

அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய வரிகளுக்கு சீனா ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தி விலக்கு பெற்றாலும், பல அமெரிக்க வர்த்தகர்கள் ஏற்கனவே மாற்று சந்தையை கண்டுபிடித்துவிட்டதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவுடன் செய்யப்படும் இடைக்கால ஒப்பந்தத்தில் சீனா மீது ஏற்கனவே விதிக்க ப்பட்டுள்ள வரிகளை அமெரிக்கா விலக்க வேண்டும் எனவும் சீனா கோரியுள்ளது.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை