நியுஸிலாந்தில் எரிமலை வெடித்து ஒருவர் பலி; பலர் எரிகாயங்களுடன் மீட்பு

நியூஸிலாந்தில் நேற்று எரிமலை வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து இருபது பேர் காணாமல் போயுள்ளனர். எரி மலையிலிருந்து புகை மண்டலம் வெளியாவதால் காணாமல் போனோரைத் தேடும் பணிகளை முன்னெடுக்க முடியாமலுள்ளது.

புகை தணிந்த பின்னரே மீட்புப் பணிகள் தொடரவுள்ளன. நியூஸிலாந்து நேரப்படி நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த எரிமலை வெடித்தது. நியூஸிலாந்தின் முக்கிய பகுதியான இங்கு அதிகளவு உல்லாசப் பிரயாணிகள் வருகின்றனர். வெளிநாட்டுப்பயணிகளைப் போன்று உள் நாட்டிலிருந்தும் அதிகளவான மக்கள் இப்பகுதிக்கு பொழுது போக்கிற்காக வருகின்றனர்.

நேற்று இந்த எரிமலை வெடித்த போது இப்பகுதியில் சுமார் ஐம்பது பேர் இருந்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்து இருபது பேர் காணாமல் போயினர். ஏனையோர் புகை மண்டலத்திற்குள் சிக்கி மூச்சுத் திணறிய போதும் ஒருவாறு தப்பியுள்ளனர். இவ்வாறு தப்பியோரில் பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இம்மலையிலிருந்து வெள்ளைப்புகை அதிகளவு வெளியேறியது.

காணாமல் போனோர் பெரும் மூச்சுத் திணறலுக்குள் உள்ளாகி எரிகாயங்களுக்கு உள்ளாக நேரிடலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இம்மலை வெடித்தமை பெரும் ஆச்சர்யத்தக்குரியதென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

வெடிப்புச் சத்தம் கேட்டதும் இப்பகுதியை நோக்கி அதிகளவான மக்கள் திரண்டனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் பலர் காயமடைந்ததாக நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தாஆர்டன் தெரிவித்தார்

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை