இலங்கை தேசிய சமாதான பேரவையினால் அக்கரைப்பற்றில் மூன்று நாள் கருத்தரங்கு

இலங்கை தேசிய சமாதான பேரவை அக்கரைபற்று 'சொன்ட்' அமைப்பின் அனுசரணையுடன் ஒழுங்குசெய்த 'இனங்களுக்கிடையே இடம்பெறும் கலவரங்கள் தொடர்பாக முன்னாயத்த நடவடிக்கைகள்' எனும் மகுடத்திலான மூன்று நாள் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

அக்கரைப்பற்றிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறை இரண்டு பிரிவுகளாக நடைபெற்றன.

அமைப்பின் மாவட்ட சர்வமத உறுப்பினர்களுக்கு வேறாகவும் உப குழு உறுப்பினர்களுக்கு வேறாகவும் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில், இலங்கை தேசிய சமாதான பேரவையின் கண்டி மாவட்ட சர்வமத உறுப்பினர் ரேணுகா மலியாகொட, அமைப்பாளர் காமினி ஜெயவீர, இலங்கை தேசிய சமாதான பேரவையின் திட்ட இணைப்பாளர் சபி நயாஜ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர். கண்டி திகனயில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனமுறுகல்களை சுமுகமான நிலைக்கு கொண்டுவருவதில் தாம் கையாண்ட நடவடிக்கைகளை விபரித்தனர். இதன்போது தமக்கு ஏற்பட்ட படிப்பினைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். தமது நோக்கம் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நாம் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டதோடு, அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பங்குபற்றுனர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் விடைகள் பகிரப்பட்டன. அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.சென்தூரராசாவும் இங்கு உரையாற்றினார்.

 

அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை