'கரைவாகு அன்றும் இன்றும்;' வரலாற்று நூல் வெளியீட்டு விழா

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் எம்.எம்.காஸீம் எழுதிய கரைவாகு அன்றும் இன்றும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது, மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது விவசாய சேவைகள் குழு தவிசாளர் எம்.எம்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை.சலீம், கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

சாய்ந்தமருது தினகரன் நிருபர் 

Wed, 12/04/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக