டிரம்ப் பதவி நீக்க விசாரணை: பாராளுமன்றக் குழு அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்னெடுத்துச் செல்ல நீதித் துறை விவகாரங்களுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் மீது ஊழல் விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில், டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நீதித் துறைக்கான பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் ஆரம்பிக்க, நீதித் துறைக்கான பாராளுமன்றக் குழு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

ஆளும் குடியரசுக் கட்சியினரும் இடம் பெற்றுள்ள அந்த பாராளுமன்றக் குழுவில், இந்த முடிவுக்கு ஆதரவாக 23 உறுப்பினார்களும், எதிராக 17 உறுப்பினார்களும் வாக்களித்தனர்.

டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையில் இந்த அனுமதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை