இந்தோனேசியாவில் 44,000 ஆண்டு ஓவியம் கண்டுபிடிப்பு

இந்தோனேசிய குகை ஒன்றின் சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியம் 44,000 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதி மனிதன் மற்றும் பாதி மிருகம் போன்ற உருவம் கொண்ட ஒருவர் ஈட்டி மற்றும் கயிறுகள் கொண்டு எருமை மாடு ஒன்றை வேட்டையாடுவது போன்று அந்த ஓவியம் உள்ளது.

இது இந்த உலகிலேயே பதிவு செய்யப்பட்டுள்ள மிகவும் பழமையான கதை என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தோனேசிய தீவான சுலவேசி என்ற பகுதியில் உள்ள ஒரு குகையிலேயே இந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தீவில் மட்டும் பழங்கால ஓவியங்கள் கொண்ட குறைந்தது 242 குகைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை