நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு

நியூசிலாந்தின் வெள்ளைத் தீவு எரிமலை சீற்றத்தை அடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அடையாளம் வெளியிடப்படாத அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தார். தீக் காயங்களுடன் சுமார் 20 பேர் தீவிரி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

எஞ்சி இருக்கும் மேலும் இரு சடலங்களை மீட்பதற்காக மீட்பாளர்கள் நேற்று அந்தத் தீவுக்கு திரும்பினர்.

குறைந்தது ஒரு சடலம் இருப்பதாக நம்பப்படும் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பொலிஸார் எட்டுப் பேர் 75 நிமிடங்கள் தேடுதலில் ஈடுபட்டனர். அங்கு வேறு சடலங்களை கண்டுபடிக்கவில்லை, என்று பிரதி பொலிஸ் ஆணையாளர் மைக் கிளமன்ட் குறிப்பிட்டுள்ளார். தீவைச் சுற்றிய நீர் மிகவும் மாசுபடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எரிமலையிலிருந்து இன்னமும் நச்சுத்தன்மை மிக்க வாயு வெளியேறி வருகிறது. அதனால், தேடி மீட்கும் பணி மிகவும் ஆபத்து நிறைந்தது என்று முன்னதாக அதிகாரிகள் கூறினர்.

கடந்த வாரம் இந்த எரிமலை வெடித்த போது 47 பேர் தீவில் இருந்தனர்.காயமடைந்தவர்களில், 10 பேரின் நிலை கவலைக்கிடமாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வகாடனே என்ற நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் வெள்ளைத் தீவு அமைந்துள்ளது.

தற்போது இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம் என்ற அபாயம் இருந்து வரும் நிலையில் அங்கு தமது உயிரைப் பயணம் வைத்து இராணுவத்தினர் காணாமற்போயுள்ள சுற்றுலாப் பயணிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mon, 12/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை