ஒபாமாவை விமர்சிக்கும் பழைய வீடியோவை ஒளிபரப்பியதால் சர்ச்சை

சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம் அல்ஜெசீராவுக்கு கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்லாமியர்கள் மத்தியில் விஷ விதைகளை விதைத்து வருவதாக அல்-கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் உரைஉயாற்றும் வீடியோவை அல்ஜெசீரா தொலைக்காட்சி ஔிபரப்பியுள்ளது.

கட்டாரின் தலைநகர் டோஹாவில் இயங்கும் அல்ஜெசீரா ஒளிபரப்புச் செய்த இவ்வீடியோ எப்போது பேசப்பட்டதென்ற விவரங்கள் தெரியாதுள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவைப் பற்றிப் பேசியுள்ளதால் இவ்வீடியோ, பழையதென நம்பப்படுகிறது.அமெரிக்காவில் ஆட்சி மாறி, புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ரம்ப் பதவியில் உள்ள நிலையில் ஒபாமாவைப்பற்றிப் பேசும் இவ் வீடியோ காலங்கடந்ததென ஊர்ஜிதமாகியுள்ளது.

அந்த வீடியோவில், சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை,அல்கொய்தா தலைவர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒசாமா கூறுகையில், ஒபாமா தனக்கு முன்பு ஆட்சி செய்த ஜோர்ஜ் புஷ்ஷின் கொள்கைகளையே பின்பற்றி வருகிறார். முஸ்லிம் உலகில் விஷ விதைகளை விதைத்து வரும் அவர், தலிபான்களுக்கு எதிராகச் செயற்படும் பாகிஸ்தான் அரசுக்கு உதவி வருவதாகவும் கூறியுள்ளார். ஒசாமாவின் இந்தப் பேட்டி கடந்த இரண்டு நாட்களில் அல்-கொய்தா வெளியிடும் இரண்டாவது வீடியோவாகும். நேற்று முன்தினம் விடீயோவாக வெளி வந்த ஒசாமாவின் தளபதி அய்மான் அல் ஜவாகிரியின் பேட்டியில், கெய்ரோ வரும் ஒபாமாவை எகிப்து மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், ஒபாமா முஸ்லிம் மக்களுடன் நெருக்கமாக, வெளிப்படையாக பேசிப்பழகி வருகிறார். ஒபாமாவின் சாதனைகளில் இருந்து மக்களின் மனதை திசை திருப்பவே இந்த வீடியோ வெளியாகியுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் இவ்வாறான வீடியோக்களை வெளியிடுவதை அல்ஜெசீரா தொலைக்காட்சி நிறுத்த வேண்டுமென சவூதி அரேபியா,ஐக்கிய அரபு இராச்சியம் என்பன வேண்டு கோள் விடித்துள்ளன.மேலும் கட்டாரில் இயங்கும் அல்ஜெசீரா தொலைக்காட்சி தலைமையகத்தை குண்டு வைத்து தகர்க்குமாறும் ஐக்கிய அரபு இராச்சியம் அமெரிக்காவைக் கோரியுள்ளது.

ஏற்கனவே பயங்கரவாதிகளுக்கு கட்டார் நிதியுதவி வழங்குவதாகக் கூறி, சவூதிஅரேபியா, குவைத், ஐக்கிய அரபுஇராச்சியம், எகிப்பது ஆகிய நாடுகள் கட்டார்மீது பொருளாதாரத் தடைவிதித்து அந்நாட்டை தனிமைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை