சாதனை படைத்த முதல் முத்துக்களை கௌரவிக்கும் விழா

ஒலுவில் அல்- மதீனா வித்தியாலயத்தில் சாதனை படைத்த முதல் முத்துக்களை பாராட்டி கௌரவிக்கும் விடுகை விழா பாடசாலை வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் கே.எல். அமீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். றஹ்மதுல்லாஹ் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனை பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எச். பௌஸ், எம்.எம். சித்தி பாத்திமா, பாடசாலை அபிவிருத்தி இணைப்பாளர் எம்.ஐ. அன்ஸார், ஒலுவில் பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ.ஜி.எப். பைறூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்திலிருந்து முதல் முதலாக 2019 இல் தரம் -05 புலைமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 17 மாணவர்களும் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் அமானுல்லாஹ் வஹீப் அகமட் (166), அப்துல் நிசார் முகம்மட் நிஹாஜ் (165) புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் சிறுவர் மெய்வல்லுநர் விiளாட்டுப் போட்டியில் தொடராக மூன்று தடவைகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலையாக ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் திகழ்கின்றது.

இவ்விழாவில் பாடசாலையில் கற்பித்து ஓய்வுபெற்றுச் செல்லும் திருமதி எஸ்.எம். இஸ்மாயில் (ஹிதாயா) ஆசிரியையை பெற்றோர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.

இதில் தரம் ஐந்து கற்பித்த ஆசிரியை எஸ். பாதிமா ஹிமாயா மற்றும் கற்று வெளியேறும் மாணவர்கள் பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னமும் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஒலுவில் நிருபர்

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை