இஸ்ரேல் ஏவுகணை மீது சிரியா இடைமறித்து சூடு

இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணைகளை நோக்கி சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு கடந்த ஞாயிறு இரவு சூடு நடத்தியதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சிரிய அரச தொலைக்காட்சி மேலும் தகவல் அளிக்காதபோதும் தலைநகர் டமஸ்கஸிற்கு அருகில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அக்ரபா புறநகர் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய ஏவுகணை ஒன்றை சுட்டுவீழ்த்தியதாக அரச தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளுக்கு கருத்துக் கூற முடியாது என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் மீது இஸ்ரேல் அண்மைய ஆண்டுகளாக தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் ஈரானின் இருப்புக் குறித்து இஸ்ரேல் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை