பாரிஸ் நட்டர்டாம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பிரார்த்தனை இல்லை

மிகப் பழமையான நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 200 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பிரார்த்தனை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள, 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தீ விபத்து காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1803ஆம் ஆண்டுக்குப் பின்னர் பழமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயத்தில் இந்த ஆண்டுதான் முதல் முறையாக கிறிஸ்மஸ் பிரார்த்தனை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாரிஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாட்டர்டாம் தேவாலயத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 12 ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தில் மளமளவென தீ பரவியது. இந்த விபத்தில் தேவாலயத்தின் பெரும்பாலான கூரைப் பகுதியும் புகழ்பெற்ற அதன் கூம்பு வடிவ கோபுரமும் சேதமடைந்தன.

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை