ஜனவரி மாதத்திற்கு முன் மாற்று அணி நிச்சயம் உருவாக்கப்படும்

ஜனவரி மாதத்திற்கு முன் மாற்று அணி நிச்சயம் உருவாக்கப்படுமென தான் நம்புவதாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன் தேவை ஏற்பட்டிருப்பருப்பதால் அதை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் பிற்பாடு தன்கென்று ஒரு கட்சியை விக்கினேஸ்வரன் ஆரம்பித்திருந்தார். அந்தக் கட்சி சார்பாக வடக்கிலும் கிழக்கிலும் அதற்கான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டுள்ளார். அதற்கான மாவட்டக் குழுக்களையும் அமைத்துக் கொண்டுள்ளார்.

நாங்களும் நீண்டகாலம் விக்கினேஸ்வரனுடன் பேசி வருகின்றோம். ஆக ஒரு மாற்று அணியின் தேவை என்பது இப்போதல்ல மிக நீண்டகாலத்திற்கு முன்னர் பேசப்பட்டது. அதற்குரிய காரணம் கூட்டமைப்பு சரியான முறையில் செயற்படவில்லை என்ற அடிப்படையில் அந்த மாற்று அணி பற்றிப் பேசப்பட்டது.

ஆகவே நாங்கள் பல விடயங்களைப் பேசி முடித்திருக்கிறோம். இப்பொழுது ரெலோவில் இருந்து ஒரு பகுதியினர் பிரிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் கூட விக்கினேஸ்வரனுடன் இணைந்த செயற்படப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அதே போல ஏனைய சிறு குழக்களாக இருக்கக் கூடியவர்களும் எங்களுடன் இணைந்து போவதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.

நாங்கள் மாற்று அணியைத் தோற்றுவிப்பதற்கான அடிப்படை வேலைகள் பல செய்யப்பட்டுள்ளன. அதற்கான யாப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் என மாறி மாறி செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு நடந்த கொண்டிருக்கின்றன. அது தவிர ஒரு தேர்தலை நோக்கிய நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தக் காலத்தில் எதை பேசினாலும் தேர்தலை நோக்கம் கொண்டதாகவே அனைத்து தரப்பினர்களதும் செயற்பாடுகளும் இருக்கும்.

அந்த அடிப்படையில் தேர்தலுக்கு முகங் கொடுக்கக் கூடியவகையில் எங்களது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறோம்.

டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத ஆரம்பத்திற்குள் ஒரு மாற்று அணியென்பது நிச்சயமாக மக்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்தப்படுமென்று நான் நம்புகின்றேன்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை