வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஅடிப்படை வசதிகள்

அரசாங்க அதிபர்களிடம் றிசாத் எம்.பி.ேண்டுகோள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்கி நிர்க்கதியான மக்களுக்கு உதவுமாறு முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.   புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் இந்த அவசர வேண்டுகோளை அவர் விடுத்திருப்பதுடன் வெள்ளத்தில் அழிவுக்குள்ளான சொத்துகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மழைநீரில் நிரம்பியுள்ள குளங்கள் திறந்துவிடப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளமும்மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் இலவங்குளம், 6ம் கட்டை, 4ம் கட்டை மற்றும் தில்லையடி உட்பட பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தின் சீற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. அம் மக்களுக்கு உதவிகள் கிடைத்து வருகின்றபோதும் தொடர்ந்தும் உதவிகள் தேவைப்படுகின்றன.

அத்துடன் விவசாயப் பயிர்கள், இறால் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

 

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை