சிவனொளிபாதமலை யாத்திரையை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள்

இன்று அமையும் பௌர்ணமி தினத்துடன் சிவனொளிபாத மலை யாத்திரிகை ஆரம்பமாகவுள்ளது. சிவனொளிபாத மலை யாத்திரிகை காலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரவுள்ளது. அதற்கமைய சிவனொளிபாதமலை யாத்திரையை முன்னிட்டு நேற்று பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாத விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நேற்று காலை பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாத விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் நான்கு வீதிகளின் ஊடாக சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பலாங்கொடை பொகவந்தலாவ ஹற்றன் நல்லத்தண்ணி வீதி வழியாகவும், பெல்மதுளை இரத்தினபுரி, அவிசாவளை ஹற்றன் நல்லத்தண்ணி வீதி வழியாகவும், இரத்தினபுரி பலாபந்த வீதி வழியாகவும், இரத்தினபுரி பாணந்துறை வீதி ஊடாக குருவிட்ட ஏரத்ன ஆகிய நான்கு வீதி வழியாக பெரஹெர சிவனொளிபாதமலையை நோக்கி சென்றது. பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாத விகாரையில் இருந்து புனித தந்த தாது சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

காவத்தை தினகரன் விசேட, இரத்தினபுரி தினகரன் நிருபர்கள்

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை