58 பேரை படுகொலை செய்த ஐவருக்கு ஆயுள் தண்டனை

பிலிப்பைன்சில் இடம்பெற்ற மிக மோசமான அரசியல் படுகொலைகளில் மூளையாக செயற்பட்டவர்கள் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்டுள்ளனர்.

தெற்கு மாகாணமான மகுயின்டானோவில் 2009 ஆம் ஆண்டு வாகன தொடரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்கதலில் 32 ஊடகவியலாளர் உட்பட 58 பேர் கொல்லப்பட்டனர். தேர்தல் வன்முறையாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பில் அரசியல் பலம் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உட்பட ஐவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சகோதரர் ஒருவர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் படுகொலைகள் தொடர்பில் மூன்று தலைமுறைகளாக செல்வாக்கு மிக்க குடும்பத்தினர் உட்பட 101 பேர் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்தனர். எனினும் சுமார் 80 சந்தேகநபர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

பதற்றம் மிக்க மகுயின்டானோவில் இந்த படுகொலைகளின் பின்னணியில் உள்ள அம்படுவான் குடுபத்தினரே ஆட்சியில் உள்ளனர். இவர்கள் அங்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் பதவிகளையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை