விசாரணையின் பின்னணி

ஜூலை

உக்ரைனுக்கு பாராளுமன்றம் அங்கீகரித்த இராணுவ உதவியை எந்த விளக்கமும் இன்றி டிரம்ப் நிறுத்திவைத்தார்.

அதன் பின்னர் 25ஆம் திகதி, உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசி வழியாக உரையாடல் நடத்தினார்.

 

ஓகஸ்ட்

உக்ரைன் ஜனாதிபதியுடன் டிரம்ப் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து, உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் புகார் செய்தார்.

 

செப்டெம்பர்

நிறுத்திவைக்கப்பட்ட இராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்க வெள்ளை மாளிகை உத்தரவிட்டது. பின் வந்த நாட்களில், டிரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் வெளியாகின.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் ஜோ பைடனையும் அவரது மகனையும் விசாரிக்கும்படி டிரம்ப், உக்ரைன ஜனாதிபதியை வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது.

டிரம்ப் மீது அரசியல் குற்றச்சாட்டைக் கொண்டுவருவது பற்றிய விசாரணையை ஆரம்பிப்பதாக ஜனநாயகக் கட்சி அறிவித்தது. டிரம்ப்புக்கும் உக்ரைன் ஜனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல், உளவுத்துறை ஊழியரின் புகார் ஆகியவற்றின் விபரங்களும் வெளியிடப்பட்டன. அவர் மீதான சந்தேகங்கள் உறுதிசெய்யப்பட்டன.

 

நவம்பர்

மக்களவை உளவுத்துறை குழு பொது விசாரணையை ஆரம்பித்தது.

 

டிசம்பர்

டிரம்ப் அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு அதிக ஆதாரங்கள் உள்ளதாக மக்களவையின் புலனாய்வு அறிக்கை கூறியது.

பிரதிநிதிகள் சபையின் நீதித்துறைக் குழு டிரம்ப் மீதான இரண்டு அரசியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டது.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை