காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்கள்

இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் ரொக்கெட் குண்டு ஒன்றை வீசியதை அடுத்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் உள்ள ஆயுத உற்பத்தி நிலையம் ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதத் தளம் ஒன்றின் மீது போர் விமானங்கள் தாக்குதல் தொடுத்ததாக இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரம் உடன் வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து காசா பகுதிக்கான மீன்படி எல்லையை குறைக்கும் அறிவிப்பை இஸ்ரேல் நேற்று வெளியிட்டது. புதிய ரொக்கெட் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக காசா மீன்பிடி வலயம் அடுத்த அறிவித்தல் வரை 10 கடல் மைல்களாக குறைக்கப்படுகிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காசாவுடனான பதற்றத்திற்கு அமைய அந்தப் பகுதிக்கான மீன்படி வலயத்தை இஸ்ரேல் அடிக்கடி மாற்றி வருகிறது.

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை