4 ஆண்டு விளையாட்டுத் தடையை எதிர்த்து ரஷ்யா மேன்முறையீடு

சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு மையம் விதித்த 4 ஆண்டு தடையை எதிர்த்து ரஷ்யா மேன்முறையீடு செய்துள்ளது.

ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்கள் ஊக்க மருந்து பயன்படுத்த, அந்நாட்டு அரசு ஆதரவாக இருந்த குற்றச்சாட்டால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 15 மாதம் தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டுக்கு 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியவில்லை.

இதுகுறித்து விசாரித்த உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் ரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு தடை விதித்தது. வரும் டோக்கியோ ஒலிம்பிக் (2020), பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் (2022), கட்டார் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் (2022) ரஷ்யா பங்கேற்க முடியாது. தனிப்பட்ட முறையில் நட்சத்திரங்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம்.

இந்தத் தடை முடிவை எதிர்த்து ரஷ்யா ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் சார்பில், முறைப்படி மேன்முறை செய்யப்பட்டது. வழக்கு சுவிட்சர்லாந்தின் லாசன்னேயில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை