பீட்டர் சிடில் ஓய்வு

11 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதாகும் பீட்டர் சிடில் 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 30.33 என்ற சராசரியில் 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், கடைசியாக நடந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்றார். 20 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.

67 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்காக ஆடியதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்த பீட்டர் சிடில், ஓய்வு பெறுவது சற்று வருத்தமாகவே உள்ளது என்றார்.

2008இல் மொஹாலியில் தன் அறிமுகப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை முதல் விக்கெட்டாகக் கைப்பற்றினார். 2010ஆம் ஆண்டு பேர்த்தில் தன் பிறந்த தினத்தன்று இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த ஹட்ரிக் சிடில் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை